Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

“மதுபான கிடங்கில் திருட்டு” மண்ட மேல உள்ள கொண்டைய மறந்தாச்சே….. 2 பேர் கைது…!!

புதுச்சேரியில் தனியார் மதுபான கிடங்கை உடைத்து மதுபாட்டில்களை திருடிய இருவரை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையில் கைது செய்தனர்.

ஊரடங்கு உத்தரவால் மதுக்கடைகள், கிடங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், மறைமலை அடிகள் சாலையில் உள்ள மதுபான கடையின் கிடங்கில் சிசிடிவி கேமராவை செயலிழக்க செய்து மர்ம நபர்கள் கொள்ளை அடித்தனர்.

சிசிடிவியை செயளிலக்க வைப்பதற்கு முன் அவர் முகத்தில் கட்டியிருந்த துணி சற்று விலக முகம் விடியோவில் பதிவாகியிருந்தது. பின் விசாரணை மேற்கொள்கையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த நபர்தான் என்று உறுதி செய்யப்பட சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இருவரை கைது செய்த காவல்துறையினர் ரூ20 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |