Categories
தேசிய செய்திகள்

வெளியூரில் இருந்த தொழிலதிபர்… தனியாக இருந்த மனைவியை மிரட்டி… பின் மர்மநபர்கள் செய்த செயல்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

போலீஸ் உடையில் வந்த 3 பேர் தனியாக இருந்த பெண்ணை ஏமாற்றிய கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தொழிலதிபர் நிரஞ்சன் மற்றும் அவரது மனைவி நர்மதா தேவி. நிரஞ்சன் 15 நாட்கள் வெளியூரில் இருந்து விட்டு சமீபத்தில் ஊருக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு சில தினங்களுக்கு முன்பு போலீஸ் உடையில் மூன்று பேர் சென்று அங்கு தனியாக இருந்த நர்மதாவிடம் உங்கள் கணவர் பெயரில் வாரண்ட் போடப்பட்டுள்ளது. அது தொடர்பாக விசாரிக்க வந்தோம் என தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு பயந்து போன நர்மதா தனது கணவருக்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளார்.

நிரஞ்சன் தான் வீட்டிற்கு வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குள் போலீஸ் உடையில் வந்த மூன்று பேரும் நர்மதாவை மிரட்டி வீட்டில் இருந்த பீரோவை திறக்க கூறியுள்ளனர். நர்மதாவும் வந்தவர்கள் போலீஸ் என நம்பி பீரோவைத் திறக்க அதில் இருந்த 3.20 லட்சம் ரூபாய் பணத்தையும் தங்க நகைகள் சிலவற்றையும் எடுத்துவிட்டு மூன்று பேரும் அங்கிருந்து ஓடி விட்டனர். இதன் பின்னரே நர்மதாவிற்கு போலீஸ் உடையில் வந்தது திருடர்கள் என்பது தெரிய வந்துள்ளது. நிரஞ்சன் வீட்டுக்கு வந்த சமயம் வீட்டில் நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்ததில் மூன்று கொள்ளையர்களின் இரண்டு பேர் முகமூடி அணிந்து இருந்ததும் ஒருவரது முகம் மட்டுமே அதில் பதிவானது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். விரைவில் திருடர்களை கண்டுபிடித்து விடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |