Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“கோடை விடுமுறையை களிக்க சென்றவர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை “பெரம்பலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !!…

கோடை விடுமுறையை களிக்க  சென்றவர்  வீட்டில் திருடர்கள் திருடிய சம்பவம்  ஏற்படுத்தியுள்ளது 

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியின் அருகே உள்ள லெப்பைக்குடிகாடு என்னும் பகுதியை சேர்ந்தவர் மதினா என்பவர் இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார் மதினா பானுவின் தந்தை வீடும் அருகாமையில் இருப்பதால் அடிக்கடி அங்கு சென்று வருவது வழக்கம் இந்நிலையில் குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை விட்டதன் காரணமாக கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி முதல் தனது குழந்தைகளுடன் தந்தை வீட்டில் தங்கி வந்தார்

இதனை அடுத்து மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின் முன்புறம் உள்ள வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த அவர் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 18 பவுன் தங்க நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கப்பணம் போன்றவை திருடு போய் இருப்பதை அறிந்தார் அதன்பின் இந்த சம்பவம் குறித்து மங்களமேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார் தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Categories

Tech |