பெரும்பாலான மருத்துவர்களின் கையெழுத்து கிறுக்கலாக இருப்பதாக தெரிவித்திருக்கும் ஒடிசா உயர்நீதிமன்றம் மருந்து பெயரை பெரிய எழுத்தில் எழுத வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.
மருத்துவர்களின் கையெழுத்து கிறுக்கலாக உள்ளது என்று பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணபட்டா மண்டல என்பவர் ஒடிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தலைமையிலான அமர்வு மருந்து சீட்டு பிரேத பரிசோதனை அறிக்கை காயங்கள் குறித்த பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவற்றை மருத்துவர்கள் தெளிவான கையெழுத்தில் எழுத வேண்டும் என்ற தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருந்துகளின் பெயர்களை தெளிவான கையெழுத்தில் பெரிய எழுத்தில் எழுத வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். இதுதொடர்பாக மாநில அரசு மருத்துவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்பது ஒடிசா நீதிமன்றத்தின் உத்தரவாகும். மேலும் இது டிஜிட்டல் உலகம் என்று தெரிவித்த நீதிபதிகள் எலக்ட்ரானிக் சாதனங்கள் வாயிலாக மருந்துகளின் தெளிவான அச்சுப் பிரதியை நோயாளிகளுக்கு வழங்கலாம் என்று கூறியுள்ளனர்.