திம்மாப்பூர் என்ற கிராமத்தை பாலிவுட் தயாரிப்பாளரான அபிஷேக் அகர்வால் தத்தெடுத்துள்ளார்.
பாலிவுட் தயாரிப்பாளரான அபிஷேக் அகர்வால் ஹிந்தியில் மிகப்பெரிய அளவில் “காஷ்மீர் பைல்ஸ்” மற்றும் தெலுங்கில் “கார்த்திகேயா-2” போன்ற வெற்றி படங்களை தயாரித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் திம்மபூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை தத்தெடுத்து அவர் நடத்தி வரும் சந்திரகலா அறக்கட்டளை மூலமாக தேவையான உதவிகளை செய்து வருகின்றார்.
தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் தந்தை தேஜ் நாராயணன் அவர்களின் 60வது பிறந்த நாளன்று கிராமத்தில் தத்தெடுப்பு விழாவை நடத்தினார். அதன் பின்னர் அந்த விழாவில் அனுபம் கெர் மற்றும் இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் குறிப்பாக தெலுங்கானா அமைச்சர் கிஷன் ரெட்டியின் சொந்த ஊர் திம்மபூர் என்பது குறிப்பிடத்தக்கது.