Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானா மாநிலத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை…!!

தெலுங்கானாவில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 32 பேர் பலியான நிலையில் வெள்ளம் மீட்பு பணிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் உட்பட்ட பல இடங்களில் நேற்று முன்தினம் முதல் இடைவிடாது கன மழை பெய்து வருகிறது. இதனால் ஹிமயட் நகர், பஸ்ஸின்பாட், ஜூப்லி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ் உள்ளிட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 32 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. வெள்ளத்தில் சிக்கியவர்களை  மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்  வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களுக்கு உணவு, மருந்துகள், உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கும்  பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில் நாளை வரை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநில முதலமைச்சர்களையும் செல்போன்னில் தொடர்பு கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

Categories

Tech |