தெலுங்கானா மாவட்டங்களில் பெய்த கன மழை மற்றும் வெள்ளம் தனக்கு கவலை அளிப்பதாக அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தெலுங்கானாவின் சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஏரிகள் மற்றும் குளங்களில் நீர் நிரம்பி வழிகின்றது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் தெலுங்கானா மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் தம்மை கவலையடைய செய்துள்ளது அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் இருக்கின்ற செஞ்சிலுவை சங்கத்தின் தன்னார்வலர்கள், நிவாரண உதவிகளில் ஈடுபடுமாறு ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.