Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்போ கெஞ்சி பேசுனீங்க…! இப்போ கொளுத்தி போட்டது யாரு ?எடப்பாடி மீது சரமாரி கேள்வி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி,  ஒற்றை தலைமை என்று சொன்னது யார்? அதைக் கேட்டது யார்? சொல்லுங்கள். நியாயமாக பேசலாம், அதை உருவாக்குனது யார் ? கொளுத்தி போட்டு பிரச்சனை செய்தது யார் ? கட்சியில், இன்றைக்கு பேசுகிறார், பதவி வெறி பிடித்தவர் என்று…

நீங்கள் சொல்லுவீங்க சார்..! 11 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு வந்து, நீங்க முதல்வராக இருப்பதற்கு அன்றைக்கு விட்டுக் கொடுத்தாரு பாருங்க, அவர் பதவி வெறி பிடித்தவர். இந்த ஆட்சி தொடர மத்திய அரசில் இருந்து பிரதமர் கூட சமாதானம் செய்து வைத்தார் என்று சொன்னார்கள், அதையும் செய்தார்.

தங்கமணியும்,  வேலுமணியும் சென்று கெஞ்சினார்கள், அடுத்த கெஞ்சல் தங்கமணி,  வேலுமணியும் அண்ணா இந்த முறை இவர் முதல்வர், அடுத்த முறை நீங்கள் முதல்வர் என்று சொன்னார்கள். அப்படியெல்லாம் சமாதானம் செய்தார்கள். இதன்பிறகு கட்சியினுடைய முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என்று அறிவித்தார். அது கட்சிக்கு செய்த துரோகம், நீங்கள் சொன்ன மாதிரி அது பதவி வெறி? என விமர்சித்தார்.

Categories

Tech |