தென் கொரியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன்னின் சகோதரி கிம் ஜோ ஜங் தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக வடகொரிய அதிபரின் சகோதரி கிம் ஜோ ஜங் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது “கொரிய போரை அதிகாரப்பூர்வமான முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை செயற்கையான புன்னகையுடன் இரண்டு படங்கள் எடுத்துக் கொள்வதால் மட்டும் உண்மை நிலவரம் மாறிவிடாது. வடகொரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தென்கொரியா தொடரும் வரை இதுபோன்ற போராட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களால் எந்த பலனும் இல்லை. எங்களை சீண்டும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு பதற்றத்தை அதிகரிப்பதை தென் கொரியா நிறுத்த வேண்டும் அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் தென் கொரியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக வட கொரியா கடந்த திங்கட்கிழமை ஏவுகணை பரிசோதனை நடத்தியது. மேலும் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை முறிந்த நிலையில் தனது வலிமையை பறைசாற்றும் விதமாகவே இந்த பரிசோதனை செய்யப் பட்டிருக்கலாம் என்பது தெரிகிறது. தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு வடகொரியா தயாராக இருப்பதன் முக்கிய காரணம் அமெரிக்கா வட கொரியா மீது உள்ள பொருளாதார தடைகளை தளர்த்த வேண்டும். என்பதற்காகத்தான் என்றும் கருதப்படுகிறது.