நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை என்றாலே அது தீபாவளி பண்டிகை தான். பள்ளி, கல்லூரிகள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை அனைத்திற்கும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட்டு விடும். இதனால் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கும், உறவினர்களை காண்பதற்கு வெளியூர்களுக்கு அதிக அளவில் பயணங்களை மேற்கொள்வார்கள். இதனால் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் கூட்டம் அலைமோதும். இட நெருக்கடியை தவிர்ப்பதற்காக மக்களின் பயண வசதிக்காக அரசு கூடுதலாக சிறப்பு பேருந்து மற்றும் ரயில்களை இயக்குவது வழக்கம். அதன்படி நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி வர உள்ளது. இதற்காக பல முக்கிய வழித்தடங்களில் ரயில்வே நிர்வாகம் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது குறித்து அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
அதன்படி, மைசூர் -துாத்துக்குடி சிறப்பு கட்டண ரயிலானது தீபாவளியை ஒட்டி மைசூரில் இருந்து அக்டோபர் 21ம் தேதி மதியம் 12:05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5:00 மணிக்கு துாத்துக்குடி வந்து சேரும். இதே தடத்தில், துாத்துக்குடியில் இருந்து மைசூருக்கு அடுத்த நாள் அதாவது அக்டோபர் 22ம் தேதி மதியம் 3:00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:30 மணிக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரயிலானது யெலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களை கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனைப்போல யஷ்வந்த்பூர் – திருநெல்வேலி இடையிலான சிறப்பு ரயிலனானது யஷ்வந்த்பூரில் இருந்து இருந்து அக்டோபர் 18 மற்றும் 25ம் தேதி மதியம் 12:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4:30 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும். மேலும், திருநெல்வேலியில் இருந்து ரயில் (06566) யஷ்வந்த்பூருக்கு அக்டோபர் 19 மற்றும் 26 ம் தேதி இரவு 11:30 மணிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது பனஸ்வாடி, கார்மேலரம், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களின் வெளியே செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.