தென்னை மரத்தில் ஏறியபோது விஷ வண்டுகள் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கனகமூலம் புதுக்குடியிருப்பு பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மரம் ஏறும் தொழிலாளியாக இருந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜா வீட்டின் அருகில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக ஏறியபோது மரத்தில் உள்ள சில விஷ வண்டுகள் அவரை கடுமையாக கொட்டியது.
இதனால் ராஜாவிற்கு உடம்பில் காயம் ஏற்பட்டு வலி தாங்கமல் மரத்திலிருந்து கீழே இறங்கினார். அதன்பின் ராஜா அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் ராஜாவின் உடல் நிலை மோசமானதால் உறவினர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராஜா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.