சுரங்கப்பாதைகளில் ராட்ச மோட்டார்கள் கொண்டு ஊழியர்கள் தேங்கியிருந்த மலைநீரை அகற்றி வருகின்றனர்.
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் முக்கிய சுரங்கப்பாதைகளான வியாசர்பாடி, கணேசபுரம், மேட்லி போன்ற பகுதிகளில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து மழை நீரானது சாலைகளில் தேங்கியுள்ளதால் போலீசார் போக்குவரத்து சேவைகளை மாற்றிவிட்டுள்ளனர்.
அதிலும் சில சாலைகளில் குண்டும் குழியுமாக இருந்ததால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் 16 சுரங்கப்பாதைகளில் தேங்கியிருந்த மழைநீரை அப்புறப்படுத்த மாநகராட்சிகள் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதிலும் மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து இரவு பகல் பொருட்படுத்தாமல் மழை நீரை வெளியேற்ற தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
மேலும் இதற்காக அதிக திறன் கொண்ட ராட்சத மோட்டார்கள் கொண்டு வரப்பட்டு தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. முக்கியமாக கணேசபுரம், ரங்கராஜபுரம், மேட்லி, போன்ற சுரங்கப்பாதைகளில் இருந்து நேற்று மழை நீர் முழுவதுமாக அகற்றப்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மழைநீர் தேங்கியிருந்த 16 சுரங்கப்பாதைகளில் 14 இடங்களில் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் மீண்டும் போக்குவரத்து சேவை தொடரப்பட்டது.