தேனி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ப்ரீத்தா வெற்றி பெற்றுள்ளார்.
27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று 27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள 10, 306 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் ஐந்து பதவிகளுக்கு தேர்தல் நடந்து வருகின்றது.
இந்தநிலையில் தேனி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ப்ரீத்தா வெற்றி பெற்றுள்ளார். தலைவர் பதவிக்கு யாருமே போட்டியிடாததால் ஏகமனதாக அதிமுகவைச் சேர்ந்த பிரீத்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.