இன்னும் 5 ஆண்டுகளில் ஒருங்கிணைந்த மற்றும் கல்வியில் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக தேனி உருவாகும் என்று துணைமுதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பழனிசெட்டி பகுதியில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக நடைபெற்ற பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் முறை நிதி உள்ளிட்டவற்றை வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பெண்களுக்கு நிதிகளை வழங்கினார்.
இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டத்தில் சட்ட கல்லூரியை உருவாக்கும் முனைப்புடன் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது என்றும், இன்னும் 5 ஆண்டுகளில் ஒருங்கிணைந்த மற்றும் வளர்ச்சி அடைந்த கல்வி மாவட்டமாக தேனி மாவட்டம் மாறும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.