- தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் நடவுக்கு ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் முதல் போக நெல் நடவுக்கு ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளன. கூடலூர், கம்பம், சின்னமனூர், குச்சனூர், கோட்டூர்,வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உழுதல், வரப்பு சீர் அமைத்தல் போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நடவுக்குத் தயாராகி வரும் நெல் நாற்றுகளை இன்னும் இரண்டு வாரங்களில் நடவு செய்ய உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.