Categories
உலக செய்திகள்

தென்கொரிய அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை…!!

தென்கொரிய அதிபர் மூஞ்சே உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் சர்வதேச விவகாரங்கள் குறித்து உரையாடினார்.

தென் கொரிய குடியரசின் அதிபர் முஞ்சே உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் நேற்று உரையாடினார். அப்போது கொரோனா பெரும் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளின் முன்னேற்றம் சர்வதேச மதிப்பு சங்கிலிகலின் தற்போதைய பரவல் வளர்ச்சி சார்ந்த மற்றும் விதிமுறைகள் அடிப்படையிலான சர்வதேச வர்த்தக முறை மற்றும் உலக வர்த்தக அமைப்பின் முக்கியப் பங்கு ஆகிய சர்வதேச விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

மேற்கண்ட விஷயங்கள் குறித்து தொடர்ந்து தொடர்பில் இருக்கவும், அனைத்து துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் மேம்படுத்தவும் தங்களது தொலைபேசி உரையாடலின்போது தலைவர்கள் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |