Categories
உலக செய்திகள்

“ஊழியர்களின் பாதுகாப்பு தான் முக்கியம்”…. தூதரகத்தை மூட முடிவு…. பிரபல நாட்டின் அதிரடி அறிவிப்பு….!!!

உக்ரைனில் உள்ள தனது தூதரகத்தை மூட உள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் 3 வாரத்தை கடந்துள்ள நிலையில் ரஷ்ய படைகள் தனது தாக்குதலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தென் கொரியா உக்ரைனின் நிலைமை மோசமாகி வருவதால் தங்கள் நாட்டு தூதரகத்தை உக்ரைனின் மேற்கே உள்ள லிவ் நகரத்தில் உள்ள தங்கள் நாட்டு தூதரகத்தை மூட உள்ளதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் “ரஷ்யா படையினர் லிவ் நகரம் அருகே தனது தாக்குதலை அதிகரித்து வருவதால் தூதரகம் செயல்படுவது மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கடினம் என்பதால் தூதரகத்தை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தது.

இதற்கிடையில் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்க தொடங்கியதும் தென்கொரியா கடந்த 3ஆம் தேதி கீவ் நகரத்தில் இருந்த தனது நாட்டு தூதரகத்தை லிவில் மாற்றியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |