புதிதாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணையை ஏவி சோதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடகொரியா நாடானது ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்கள் சோதனையை ஐ.நா.சபையின் எச்சரிக்கையை மீறியும் உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் செய்து வருகிறது. இதற்காக வடகொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் கொரியா பகுதியை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்ற வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இது குறித்து வடகொரியாவுடன் அமெரிக்கா பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. இதனையடுத்து வடகொரியா அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவை அச்சுறுத்தும் வகையில் ஏவுகணைகளை அனுப்பி சோதித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வார இறுதியில் நீண்ட தூரம் செல்லும் இரண்டு ஏவுகணையை தொடர்ந்து ஏவி சோதனை நடத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை அண்டை நாடுகளையும் சர்வதேச சமூகத்தையும் அச்சுறுத்தும் விதத்தில் இருந்ததால் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மீண்டும் கண்டம் விட்டு கண்டம் செல்லும் 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை அனுப்பி சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணையானது ஜப்பான் கடலை நோக்கி ஏவப்பட்டுள்ளது. இது 60 கிலோமீட்டர் உயரத்தில் 800 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றுள்ளது. இந்த ஏவுகணையானது கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் நடுவிலுள்ள கடலில் நொறுங்கி விழுந்துள்ளது என தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த ஏவுகணை சோதனையால் எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இதற்கிடையில் சுற்றியுள்ள நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் வடகொரியாவின் இந்த செயலுக்கு ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா கண்டனம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அமெரிக்காவுடன் இணைந்து வடகொரியாவில் இருக்கும் சூழல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஒரு வேளை ஏதேனும் எதிர் தாக்குதல் நடத்தினால் அதற்கும் பதிலடி கொடுக்கப்படும் என்று தென்கொரியா அறிவித்துள்ளது. இந்த நிலையில் நீர்மூழ்கி ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இதனை தென்கொரியா அனுப்பியுள்ளது. குறிப்பாக இது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகும். இந்த ஏவுகணை சோதனையானது நேற்று பிற்பகலில் நடைபெற்றுள்ளது. மேலும் தென்கொரியா அதிபரான மூன் ஜே இன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அதிலும் 3 டன் எடைக் கொண்ட நீர்மூழ்கி கப்பலில் இருந்து இந்த ஏவுகணையானது ஏவப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையானது இலக்கை குறிவைத்து துல்லியமாக தாக்கியுள்ளது.