தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 287 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் டெல்டா பாதிப்பினை தொடர்ந்து ஒமைக்ரான் எனும் புதிய வைரஸ் 3 வது அலை, 4 வது அலைக்கு காரணமாகியுள்ளது. இதற்கிடையில் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதற்கிடையில் கடந்த வாரத்தில் 5 லட்சத்தை கடந்து வந்த நிலையில் சற்று குறைந்தது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,87,213 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 1.20 கோடியை தாண்டியுள்ளது. இதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 287 ஆக உயர்ந்து தற்பொழுது எண்ணிக்கை 15, 186 ஆக அதிகரித்துள்ளது.