Categories
மாநில செய்திகள்

தென்மாவட்ட வளர்ச்சி விவகாரம்…. “அம்மா அரசு போல் திமுக நடவடிக்கை எடுக்குமா?”…. ஆர்.பி. உதயகுமார் கேள்வி….!!!!

தமிழக அரசு தொழில்கள் வளர்ச்சியை சென்னை கோவையை சார்ந்த அகலப்படுத்தி கொண்டே செல்கிறது. மதுரை முதல் கன்னியாகுமரி வரை ஏர்போர்ட் போக்குவரத்துக்கான நான்கு வழிச்சாலை ரோடு, குடிநீர் வசதி, ஏராளமான நிலம், மனிதவளம் எல்லாம் இருந்தும் தொழிற்சாலையில் தென் மாவட்டங்கள் பின்தங்கியே உள்ளது. இதுகுறித்து ஆர்பி உதயகுமார் கூறியது, தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி குறித்து நீண்ட விவாதம் நடைபெற்று வருகிறது. நிலம், தண்ணீர், மின்சாரம் தேவையான அளவில் இருந்தால் கூட தொழில் தொடங்க தயக்கம் காட்டப்பட்டு வருகிறது. புரட்சித்தலைவி அம்மா தென் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களை அதிக அளவில் உருவாக்கினார். அதன் மூலம் தேவையான அளவில் தொழில் நிறுவனங்களுக்கு மனித வளத்தை உருவாக்க வாய்ப்பு அமைந்தது. தென் மாவட்டங்களில் உள்ள மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களை இணைத்து மண்டலமாக உருவாக்கப்பட்டது.

அதனைப் போல மதுரை, தூத்துக்குடி சாலையை பொருளாதார சாலையாக உருவாக்கப்பட்டது. மேலும் தொழில் தொடங்க மானியம், வட்டியில்லா கடன், அரசு நிலம் ஆகியவை தொடங்கப்பட்டது .அதனை தொடர்ந்து தொழில் நிறுவனங்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் இருந்தது. தென் மாவட்டங்களில் முதலீட்டை ஈர்க்க அம்மாவின் வழியில் எடப்பாடியார் தனிக் கவனம் செலுத்தினார். இதனையடுத்து மதுரையில் சர்வதேச விமான நிலைய அமைக்க பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும் மேலூர் கப்பலூர் வரை உள்ள 27 கிலோமீட்டர் சுற்றுசாலையை விரிவு படுத்தினார். சுற்றுசாலையை எதிர் திசையில் உள்ள வாடிப்பட்டி மேலூரில் உள்ள அரை வட்ட சாலையை எடப்பாடி யார் காலத்தில் கொண்டுவரப்பட்டது. தற்போது இந்த சாலையில் எல்லாம் முழு வட்ட வடிவமாக இப்போது பணிகள் நடைபெற்று வருகிறது. அதனைப் போல நத்தம் சாலையில் ரூ.1000 கோடியில் பறக்கும் பாலம் நடைபெற்று வருகிறது.

அந்த சாலை துவரங்குறிச்சியில் இணையும். அதனைப் போல மேலூர் காரைக்குடியில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தென் மாவட்டத்தில் தொழில் தொடங்க பல்வேறு கட்டமைப்புகளை எடப்பாடி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை போன்ற நகரங்களில் பெரும் தொழிற்சாலைகள் உருவாகி வருகிறது. திருப்பூர், ஈரோடு, கோவை போன்ற நகரங்களில் சிறுகுறு நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் என்று திமுக அரசு கூறியது தற்போது செயல்படுத்துமா?. அதனைப் போல மதுரையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே இரண்டு பூங்காக்கள் உள்ளது. அது இன்னுமும் முழுமையாக்கப் படவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது. எனவே தென் மாவட்டங்களில் தொழில் முனைவோர்களுக்கு அம்மா அரசு போல் திமுக அரசு நடவடிக்கை எடுக்குமா?. தொழில் பேட்டை தொடங்க நிலம் உள்ளது. அரசு அதனை முறையாக பயன்படுத்தி தொடங்க வேண்டும். தென் மாவட்டத்தில் தொழில் முதலீட்டை ஈர்க்க அரசு என்ன திட்டம் வைத்துள்ளது, அரசு உரிய திட்டத்தை செயல்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கிடையில் கடந்த ஒன்றரை ஆண்டு காலம் மதுரை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஒரு சிறு தொழிற்சாலையோ உருவாக்கியதாக அடையாளம் தெரியவில்லை. எனவே பின்தங்கிய மாவட்டங்களுக்கு திமுக அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |