தென்மேற்கு ராணுவ தலைமையிட செயல்பாட்டில் ராணுவ உயர் அதிகாரிகள் இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மூத்த லெப்டினன்ட் ஜெனரல் ஒருவரை இராணுவத்தளபதி எம்எம் நரமணே நியமித்துள்ளார்.
ராஜஸ்தான், பஞ்சாப் மாநில பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொறுப்பான தென்மேற்கு ராணுவ தலைமையகத்தில் பொறுப்பில் உள்ள ராணுவ அதிகாரிக்கும், அவருக்குக் கீழ் பணியாற்றும் ராணுவ அதிகாரிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தலைமையிட செயல் பாட்டில் தடைகள் ஏற்பட்டு உள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.