சரக்குகள் மூலமாக கிடைத்துள்ள வருவாய் குறித்து தென்மேற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.
தென்மேற்கு ரயில்வே சரக்குகள் வாயிலாக கிடைத்த வருவாய் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “தென்மேற்கு ரயில்வே சார்பில் இயங்கும் சரக்கு ரயில்களில் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு சரக்குகள் ஏற்றி, இறக்கப்படுகின்றன. இந்த நிலையில் நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கையாளப்பட்ட மொத்த சரக்குகள் மூலமாக தென்மேற்கு ரயில்வேக்கு சுமார் 3,37,00,00,000 வருவாய் கிடைத்துள்ளது.
இது கடந்த ஆண்டை விட 24.56% அதிகமாகும். மேலும் கொரோனா தொற்றுக்கு பின்பு ரயில்களில் சரக்குகளை ஏற்றுவது அதிகரித்துள்ளது. அதிலும் கடந்த ஐந்து மாதங்களில் 3.54% மில்லியன் டன் சரக்குகள் ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1.30% மெட்ரிக் டன் இரும்புத்தாது அனுப்பப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டை காட்டிலும் 16.6% அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டை விட சரக்குகளை அனுப்புவது இந்த ஆண்டில் 23.7% உயர்ந்துள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் 10%மும், சர்க்கரை 14.3%மும், உரம் 147%மும், பெட்ரோலியம் 10%மும், இரும்பு மற்றும் இரும்புக் கம்பிகள் 10% அனுப்பப்பட்டுள்ளன. இறுதியாக சிமெண்ட் ஆலைகளில் இருந்து 14.3% பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.