Categories
ஆன்மிகம் ஈரோடு மாவட்ட செய்திகள்

ரங்கசாமி மல்லிகார்ஜுனா கோவில்…. தெப்ப திருவிழாவில்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

தெப்ப திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் திகனார் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரங்கசாமி மல்லிகார்ஜுனா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்திற்கான தெப்பத் திருவிழா நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன் பின் மதியம் 12 மணிக்கு சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் வீதி உலா நடந்தது. இதனை அடுத்து ஊர்வலமாக சென்ற சுவாமி தெப்ப திருவிழா நடைபெறும் குளத்தை சென்றடைந்தது.

பின்னர் அங்கு சுவாமிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு குளத்தின் நடுப்பகுதிக்கு பக்தர்கள் சுமந்து சென்றுள்ளனர். அங்கு தேர் வடிவில் இருந்த தெப்ப சப்பரத்தில் சுவாமி வைக்கப்பட்டு குளத்தை மூன்று முறை சுற்றி வந்துள்ளது. அதன்பின் குலத்தின் தரையில் நின்ற பக்தர்கள் சுவாமியை வழிபட்டுள்ளனர். இந்த வழிபாட்டில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடத்தப்பட்டது. இதனை அடுத்து குளத்தினுடைய மறுகரைக்கு சப்பரம் கொண்டுவரப்பட்டது. அங்கு கூடியிருந்த பக்தர்கள் சாமிக்கு மலர்கள் தூவி தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |