Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

18 ஆண்டுகள் கழித்து நடைபெறும் தேரோட்டம்…. நாளை தொடங்கவிருக்கும் முதல் உற்சவம்…. அதிகாரிகள் ஆய்வு….!!

18 ஆண்டுகள் கழித்து தேரோட்டம் நடைபெற இருப்பதால் தேர் மற்றும் தேர் செல்லும் பாதையை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள தேர் சிதிலமடைந்தது. இதனால் 18 ஆண்டுகள் கழித்து புதிதாக ரூ.30 லட்சம் மதிப்பில் 25 அடி உயரத்தில் பெரிய மரத்தேர் உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல் உற்சவம் நாளை தொடங்க இருக்கிறது. மேலும் வருகிற 9-ஆம் தேதி இரவு தேரோட்டமும், 10-ஆம் தேதி பகல் தேரோட்டமும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஆரணி தாசில்தார் க.பெருமாள் மற்றும் மின்வாரியம், தீயணைப்பு துறை, ஊரக உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் புதியதாக இணைக்கப்பட்ட பெரிய மரத்தையும் தேர் செல்லும் பாதைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் இந்த ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சங்கர், விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Categories

Tech |