Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தீரன் படம் பாணியில்…. இரும்பு… கடப்பாரை… ஆயுதங்களுடன்…. திருட முயற்சி….. தனிப்படை அமைத்து மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

திருவள்ளூரில் கடப்பாரை, இரும்பு கம்பிகளுடன் குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்து திருட முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே வசித்து வருபவர் பரசுராமன். இவர் அப்பகுதியில் கட்டுமான பணிகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இவர் தனது கடையின் பின்புறம் அவர் இருக்கும் வீட்டோடு சேர்த்து மூன்று வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இதையடுத்து நேற்றையதினம் அந்த குடியிருப்பு வளாகத்திற்குள் இரும்பு கம்பி கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்த 2 மர்ம நபர்கள் முதலில் இரு வாடகை வீட்டினை வெளிப்புறமாக பூட்டினர்.

அதன் பின் தினேஷ்குமார் என்பவர் தங்கி இருக்கும் மற்றொரு வாடகை  வீட்டில் ஜன்னல் வழியாக உள்ளே கைவிட்டு தாழ்ப்பாளை திறக்க முயன்றனர். அப்போது சத்தம் கேட்டதும் அவர் கதவை உள்பக்கமாக அழுத்தி கூச்சலிட்டு உள்ளார்.

இந்த சத்தம் கேட்டு அருகே உள்ள குடியிருப்பு வளாகத்தில் இருந்து மக்கள் வெளியே வர திருடர்கள் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தப்பி சென்றனர். அப்போது வீட்டின் உரிமையாளர் பரசுராமன் என்பவருக்குச் சொந்தமான கொக்லைன் இயந்திரத்திலிருந்து ரூ10 ஆயிரம் மதிப்புள்ள பொருளை திருடிச் சென்றனர். இது குறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கிடைத்த முக்கிய தடயம் கொண்டு தனிப்படை அமைத்து திருடர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Categories

Tech |