Categories
தேசிய செய்திகள்

தேர்தல் கமிஷனர் அசோக் லவாசா… திடீர் ராஜினாமா கடிதம்…!!!

தேர்தல் கமிஷனர் அசோக் லவாசா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்திய தேர்தல் கமிஷனர் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோராவுக்கு அடுத்த இடத்தில் இருந்து கொண்டிருப்பவர் தேர்தல் கமிஷனர் அசோக் லவாசா. இவரின் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. இந்நிலையில் அவர், கடந்த மாதம் ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த புதிய பதவியை ஏற்பதற்காக அசோக் லவாசா தேர்தல்

கமிஷனர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவர் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்க்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், வருகின்ற 31ம் தேதியுடன் தன்னை பதவியில் இருந்து விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |