Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தல்…. நகராட்சி அலுவலகத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகள்…. எஸ்.பி. நேரில் சென்று ஆய்வு….!!

கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஜெயகுமார் ஆய்வு நடத்தினார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி நகராட்சியில் 36 வார்டுகளுக்கு வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. இதனால் கோவில்பட்டி மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நகராட்சி அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வின் போது கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Categories

Tech |