Categories
உலக செய்திகள்

தேர்தலை ஒத்தி வைத்த ஹாங்காங்… “மக்கள் வாக்களிக்க முடியுமா…?” கண்டனம் தெரிவித்து அமெரிக்கா…!!

ஹாங்காங் சட்டசபைத் தேர்தலை அடுத்த ஆண்டு ஒத்திவைத்ததற்கு ஹாங்காங் அரசின் மீது அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

சீனாவில் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்ற ஹாங்காங்கில் வருகின்ற செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. சர்ச்சைக்குரிய ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்திய பின்னர் வருகின்ற இந்தத் தேர்தலானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக சார்பு கட்சிகளின் கை ஓங்கும் என்றும் சீன ஆதரவு கட்சிகள் பின்னடைவை சந்திக்கும் என்றும் பெரும்பாலான எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இந்நிலையில் செப்டம்பர் மாதம் நடப்பதாக இருந்த தேர்தலை ஒரு ஆண்டு தள்ளி வைத்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடத்துவதற்கு ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லாம்  இந்த வாரத்தின் தொடக்கத்தில் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து இந்த முடிவானது ஜனநாயகத்தை அழிக்கும் முயற்சி என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும் ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்தி வைத்ததற்கு அமெரிக்கா பெரும் கண்டனம் தெரிவித்து வருகின்றது.

இது பற்றி அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், செப்டம்பர் ஆறாம் தேதி நடக்க இருந்த சட்டசபை தேர்தலை ஹாங்காங் அரசு ஒத்தி வைத்ததற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிக்கிறது. இவ்வளவு நீண்ட தாமதத்திற்கு எத்தகைய சரியான காரணமும் கிடையாது.அதனால் ஹாங்காங்கில் இனி ஜனநாயக ரீதியில் தேர்தல் நடைபெறுமா? அல்லது மக்கள் வாக்களிக்க முடியுமா? என்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இதனால் ஹாங்காங் அரசு அறிவித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதற்கு முன்னதாக திட்டமிட்டபடி அல்லது செப்டம்பர் 6-ஆம் தேதிக்கு அருகிலேயோ தேர்தலை கட்டாயம் நடத்த வேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |