தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் பாத்தீங்கன்னா….அந்த அளவுக்கு கிடுக்கிப்பிடியில் மாட்டிக்கொண்டு இருக்கின்றார். எங்கேயும் போக முடியாமல்… குடும்பம், மருமகன், மகன், மனைவி இப்படி பண்ணலாம் ? அப்படி பண்ணுங்க ? இங்க கமிஷன் வருதுன்னு… கூடாதுன்னு இன்னொரு பக்கம் நம்ம சங்கீங்க. ஏன் தப்பு பண்றீங்க ? என்ன பண்றீங்க ? ஏன் இப்படி பண்றீங்க ? ஆர்ப்பாட்டம் போராட்டம் டெய்லி நடத்துறாங்க.
அந்த நேரத்தில் முதலமைச்சரை பாத்து அந்த கேள்வி உ.பி கேட்டாரு என்றால் ஏத்துக்கலாமா ? என்று நீங்களே சொல்லுங்க… அதனால் அந்த உடன்பிறப்புக்கு நான் பதில் கொடுக்க இப்போது கடமைப்பட்டு இருக்கிறேன். தம்பி இப்ப தான் வந்திருக்கிறோம்… இப்பதான் வாம் அப் ஆகி இருக்கின்றோம். இப்பதான் சட்டி சூடா ஆகி இருக்கு. இன்னும் 17 மாதம் இருக்கு. 2024 பாராளுமன்றத் தேர்தல் வரைக்கும் இதைவிட பயங்கரமாக இருக்கும். இதுக்கே கதறுனீங்க அப்படின்னா…
இன்னும் கதறுவதற்கு நிறைய இருக்கு என்று அந்த உ.பிக்கு அன்போடு இந்த மேடையில் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்து பார்த்தீங்கன்னா… இந்த திமுக கட்சி. தனிப்பட்ட முறையில் என்னை விமர்சனம் என்பது செய்வது இவர்களுக்கு பொழுதுபோக்கு. ஒரு அவார்ட் கொடுப்பாங்க போல. இந்த மாதம் யாரு அண்ணாமலை அதிகமா திட்டுனது ? என கூறி அவார்ட் கொடுப்பாங்க போல. காலையிலிருந்து இரவு வரை இவனுங்க ஆரம்பிச்சிருந்தாங்க. ஆரம்பிச்சு.. நம்ம குடும்பம். எங்க ? எப்படி ? என்ன படிச்ச ? இதுல நீங்க குடுக்குற கவனத்தை, கொஞ்சமாவது மக்கள் பக்கம்… மக்களுடைய குறைகள் பக்கம்…. கவனம் செலுத்துங்க என தெரிவித்தார்.