Categories
உலக செய்திகள்

நிறையா பிரச்சனை இருக்கு…. ஒன்னா நின்னு சாதிப்போம்… ஜோ பைடன் அழைப்பு …!!

அதிபர் தேர்தலில் வெற்றி உறுதி என அதிபர் வேட்பாளராக போட்டியிட்டு முன்னிலை வகிக்கும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னிலை வகிக்கும் ஜோ பைடன் நாட்டு மக்களிடம் பேசும் போது, உங்களுடைய வாக்குகளுக்கு பலன் உண்டு. அது நிச்சயம் எனப்படும், உங்களுடைய குரல்கள் கேட்கப்படும். ஒரு வளமான, வலுவான ஒரு ஒன்றியத்தை கட்டமைப்போம். இதுதான் நம்முடைய எண்ணம். நம்மிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு, அது பரவாயில்லை. ஜனநாயகத்தின் அழகே கருத்து வேற்றுமை தான் என ஜோ பைடன் தெரிவித்தார்.

அரசியல் என்பது முடியாத ஒரு யுத்தம் என்பதை நாம் உணர வேண்டும். பிரச்சனையை உருவாக்குவது நோக்கமல்ல, பிரச்சனையை தீர்ப்பது தான் அரசியலின் நோக்கம். மக்களுடைய வாழ்க்கையை மாற்றுவது தான் அதனுடைய லட்சியம். நாம் எதிரிகள் அல்ல, நாம் அனைவரும் அமெரிக்கர்கள். நீங்கள் யாராக இருந்தாலும் சரி 150 மில்லியன் அமெரிக்கர்கள் இந்த தேர்தலில் மொத்தமாக வாக்களித்துள்ளனர். எல்லோருக்கும் இடையில் ஒரு ஒற்றுமை இருக்க முடியும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கலாம், பொறுப்போடு இருக்க முடியும். என்னுடைய கடமை ஒட்டுமொத்த அமெரிக்கர்களுடைய பிரதிநிதியாக இருப்பது.

எல்லோருக்குமான அதிபராக இருப்பது. எனக்கு வாக்களித்தவர்கள் எல்லாருக்குமான அதிபராக நான் இருப்பேன். இதுதான் என்னுடைய கடமை. மிகப் பெரிய பிரச்சனைகள் நம்மை எதிர்நோக்கி இருக்கிறது. பருவநிலை மாற்றம், பொருளாதார பிரச்சனை, நமக்கு இடையே இருக்கும் வேறுபாடுகளை மையப்படுத்தி நம்மை நம் நேரத்தை வீணாக்க முடியாது. ஒரு வளமான எதிர்காலத்தை கட்டமைப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். பலமுறை நான் சொல்லி இருக்கின்றேன்… இதற்கு முன்பும் இல்லாத ஒரு நம்பிக்கை நம் தேசத்தின் மீது இப்போது எனக்கு வருகிறது. நாம் யார் என்பதை உணரவேண்டும்.  அமெரிக்கர்கள் என்பது தான் நம்முடைய முக்கியமான அடையாளம். இந்த உணர்வு நமக்கு இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என ஜோ பைடன் பேசினார்.

Categories

Tech |