Categories
உலக செய்திகள்

இத கடக்கணும்னா நிறைய கட்டுப்பாடுகள் இருக்கு… அதனால மாத்தி யோசிப்போம்… புது கடல் பாதையை கண்டுபிடித்த பிரான்ஸ்…!

பிரிட்டன் வழியாக அயர்லாந்துக்கு செல்ல கட்டுப்பாடுகள் அதிகரித்திருப்பதால் புதிய கடல் மார்க்கத்தை பிரான்ஸ் கண்டுபிடித்துள்ளது.

பிரான்சிலிருந்து அயர்லாந்துக்கு செல்வதற்கு பிரிட்டன் வழியாக செல்வது மிகவும் சுலபம். ஆனால் பிரிட்டன் கடுமையான கட்டுப்பாடுகளையும் தாமதங்களை ஏற்படுத்தியுள்ளதால் அயர்லாந்துக்கு செல்வதற்கு வேறொரு புதிய கடல் மார்க்கத்தை பிரான்ஸ் கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய மார்க்கத்தை கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி முதல் தொடங்கினர்.

இந்நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு படகு போக்குவரத்து நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. பிரிட்டன் வழியாக அயர்லாந்துக்கு செல்வது வேகமானது மட்டுமல்லாமல் செலவும் குறைவானது. ஆனால் தற்போது பிரெக்சிட் காரணமாக சுங்கசோதனைகளும், கட்டுப்பாடுகளும் அதிகரித்துள்ளதால் பிரிட்டன் வழியாக அயர்லாந்துக்கு செல்வதை படகு போக்குவரத்து தவிர்த்து வருகின்றன.

Categories

Tech |