தமிழகத்தில் மாவட்டம் வாரியாக மொத்தம் 316 கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில், தமிழகத்தில் 16 மாவட்டங்கள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று மட்டும் 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 8 நாட்களாக 1,000த்தை கடந்த நிலையில், நேற்றும் பாதிப்புகள் 1,500ஐ தாண்டியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்து 33,229 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளின் விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது