Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயில் நிறையா இருக்கு..! நாக்குல தடவுற மாதிரி… பாஜக போய் இருக்கட்டும்…!!

பாஜக சிறை நிரப்பும் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தயவு செய்து பாஜக சிறையை நிரப்பட்டும். நிறைய சிறை இருக்கு.  போய் இருங்க. அதை யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லையே… முதல்ல அண்ணாமலைக்கு ஆ.ராசா பேசுனதுல உடன்பாடு இருக்கா ? இல்லையா ? முதலில் சொல்லுங்க. நீங்க…

உங்க தர்மம்,  உங்க மனதர்மம் எழுதி வைத்திருப்பதை தான் அவர் சொன்னாரு. அதை இல்லைன்னு மறுக்கிறீர்களா ? அப்போ எதுக்கு அவருக்கு எதிராக போராடுனீங்க. நீங்க போராட வேண்டியது அந்த மனு தர்மத்திற்கு எதிராக… அதை எழுதினவருக்கு எதிராக..  அந்த கோட்பாட்டுக்கு எதிராக..  நீங்க போராடனும். இப்படி காலம்காலமா என்னை இழிவு படுத்தி சுமத்தி வச்சிருக்கியே அப்படினு போராடுங்க. பாட புத்தகத்தில் இருக்குது அப்படின்னா என்ன பண்ண சொல்றீங்க ?

சாராயத்தை விற்று, அதுல வர காசுல.. 50, 000 கோடிஎடுத்துக்கறீங்க ஆண்டுக்கு.. எங்களுக்கு ஒரு ஐயாயிரம் கோடி கொடுக்குறீங்க ( இலவச நலத்திட்டமாக)  மொத்த வெல்லத்தை எடுத்து கொஞ்சம் நாக்குல தடவுற மாதிரி,  அடிச்ச கொள்ளையில் எங்களுக்கு கொஞ்சம் பங்கு கொடுக்கீங்க, அப்படித்தானே இது என தெரிவித்தார்.

Categories

Tech |