தேனி மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வரும் பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
தேனி மாவட்டம் போடி அடுத்துள்ள சிறைக்காடு பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் 45 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் அவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுத்துள்ளனர். இந்நிலையில் பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பழங்குடியினர் குடியிருப்புக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து பழங்கியினர் மக்களுக்கு மாற்று வீடுகள் கட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையும் அங்கு குடியிருப்புகள் கட்டப்படாமல் இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வீடுகள் கட்டும்பணிகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் பழங்குடியின மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதை அறிந்த ஆட்சியர் அவர்களிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். கடைசியாக வலசதுறை சாலை முதல் மல்லிபட்டி வரை அமைத்து வரும் சாலை பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இந்த ஆய்வில் மாவட்ட உரக்க வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆண்டாள், தாசில்தார் செந்தில் உட்பட பல அதிகாரிகள் உடனிருந்துள்ளனர்.