Categories
உலக செய்திகள்

தொடரும் முயற்சி…. பழைய முறை பலனளிக்குமா?…. கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் இரத்தத்தை வைத்து சிகிச்சை!

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தொற்று நோய்கள், அம்மை நோய்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறையை தற்போது கொரோனா நோயாளிகளுக்கும் அளிப்பதற்கு முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் இரத்தத்தை எடுத்து, கொரோனா பாதித்தவர்களுக்கு செலுத்துவதுதான் செலுத்துவதன் மூலம் சிகிச்சை அளிப்பதே பழமையான சிகிச்சை முறையாகும். ஏற்கனவே தொற்றுநோய் மற்றும் அம்மை போன்ற பாதிப்புகளுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முன்பு வரை இந்த முறைதான் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது.

சமீபத்தில் சார்ஸ், எபோலோ நோய்களுக்கும் இந்த பழைய முறை  சோதனை செய்து பார்க்கப்பட்டது. தற்போது, கொரோனாவுக்கும் இந்த சிகிச்சை முறை  சோதித்துப் பார்க்கப்பட இருக்கின்றது.

அதாவது, கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று, குணமடைந்தவர்களின் ரத்தத்தில், அந்த வைரசை எதிர்க்கும் பிளாஸ்மா செல்கள் நன்கு வளர்ந்திருக்கும். இவற்றை  குணமடைந்தவர்களின் ரத்தத்தில் இருந்து எடுத்து, புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் செலுத்தும்போது சிகிச்சை நல்ல பலனை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகின்றது.

Image result for There are reports that efforts are being made to treat coronavirus patients with plasma in the blood.

இந்த சிகிச்சை முறையை ஏற்கனவே சீனாவில் சோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அமெரிக்காவில் பின்பற்றுவதற்கு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜான்ஸ்  ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவர் அர்டுரோ காஸாடேவால் கூறுகையில், இந்த சிகிச்சை உறுதியான பெரிய பலனை தரும் என்று சொல்ல முடியாது. ஆனால் வரலாற்றில் இந்த சிகிச்சை முறையில் பலனளித்து  இருப்பதால் பெரும் நம்பிக்கையை எங்களுக்கு கொடுக்கிறது  என்று தெரிவித்தார்.

Categories

Tech |