தேனி மாவட்டத்தில் பல்வேறு கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய நபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் உலகத்தேவர் தெருவில் வைரமுத்து(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கஞ்சா விற்பனை செய்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் காவல்துறையினர் வைரமுத்துவை கைது செய்து அவரிடம் இருந்து 28 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து வைரமுத்துவை கம்பம் வடக்கு காவல்துறையினர் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து வைரமுத்து பல்வேறு குற்றங்களிலும் ஈடுபட்டு வந்ததால் பல்வேறு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் வைரமுத்துவை குண்டர் சட்டத்தில் கைது செய்யகோரி மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனை பரிசீலித்த ஆட்சியர் வைரமுத்துவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்ட நிலையில் அதற்கான உத்தரவை காவல்துறையினர் சிறைத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.