Categories
தேசிய செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 91 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு.. மொத்த எண்ணிக்கை 384: டெல்லி முதல்வர்

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 91 பேருக்கு புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தமாக 384 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ள 384 பேரில் 58 பேர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் என கூறினார். அவர்களில் பலர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும், ஆனால் டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த 58 நோயாளிகள் மூலம் அவர்களது குடும்பத்தினரை சேர்ந்த 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்று பாதித்தோரில் 259 பேர் மர்கஸ் மசூதியில் நடைபெற்ற மதக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா வைரஸ் காரணமாக டெல்லியில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். அவர்களில் ஒருவர் மார்க்கஸில் இருந்து வெளியேற்றப்பட்டவர்.

இதையடுத்து, கொரோனாவால் வாழ்வாதாரம் பாதித்த மக்கள் தங்கும் வகையில் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். தற்போதுவரை, 57,000 பேர் தங்குவதற்கு 328 நிவாரண மையங்களை நாங்கள் தயார் செய்துள்ளோம் என்றும். இந்த நிவாரண மையங்களுக்கு யார் வேண்டுமானாலும் வந்து இங்கு தங்கலாம் நாங்கள் அவர்களை கவனித்துக்கொள்வோம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |