அமெரிக்க படைகளை நோக்கி மீண்டும் ஈராக்கில் தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க படைகள் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ராணுவ தளத்தில் தங்கியுள்ளனர். இந்நிலையில் அந்த இராணுவ தளத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அந்த தாக்குதலில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதா ? யாருக்கேனும் காயம் ஏற்பட்டுள்ளதா ? உயிரிழப்பு நடந்துள்ளதா ? என்பது குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதேசமயம் அந்த இராணுவ தளத்தின் மீது சில நாட்களுக்கு முன்பு டிரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதலும் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.