Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காவலர்களை தள்ளிவிட்டு… வாக்குப்பெட்டி திருட்டு… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டையில் காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 27 மாவட்டங்களுக்கு முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்கு பதிவு இன்று  காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் தங்களது வாக்கினை செலுத்தினர். வாக்குப்பதிவுக்கு  24, 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க, 63000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இறுதியில் 5 மணிக்கு வாக்கு பதிவு நிறைவடைந்தது. வாக்குகள் பதிவான பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில்   புதுக்கோட்டை மாவட்டம் பெரிய முள்ளிப்பட்டியில் வாக்குச்சாவடியில்  பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் வாக்குப்பெட்டியை திருடி சென்றனர். காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |