கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகள் வீடுகளின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதைத்தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு கடிதம் ஒன்று வந்திருக்கிறது.
அந்த கடிதத்தில், பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டுகள் வீசப்படும். காவல்துறை எங்களுக்கு எதிரி அல்ல. சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எஸ்.டி.பி.ஐ மற்றும் பி.எப்.ஐ என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் தற்பொழுது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கடிதம் வந்தது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.