Categories
தேசிய செய்திகள்

“ஒரு மன்னிப்பு இல்ல, யாரும் ராஜினாமா செய்யல”…. ரொம்ப அதிர்ச்சியா இருக்கு…. மோர்பி பால விபத்தில் கொந்தளித்த காங்கிரஸ்….!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்பிறகு விபத்தில் சிக்கிய 170-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சீரமைப்பு பணிகள் திறக்கப்பட்ட 5 நாட்களிலேயே பாலம் இடிந்து விழுந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு குஜராத் மாநில அரசின் மீதும், மத்திய அரசின் மீதும் எதிர்க்கட்சிகள் சரமாரியான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள்.  அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தற்போது விபத்து குறித்து பேசியுள்ளார். ‌அவர் கூறியதாவது, குஜராத் மாநிலத்தில் மோர்பி தொங்கும் இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து மாநிலத்தின் நியாயமான பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். இப்படிப்பட்ட துயர சம்பவத்திற்கு அரசு தரப்பில் இருந்து ஒருவர் கூட மன்னிப்பு கேட்கவில்லை என்பதுதான் மிகவும் அதிர்ச்சியான விஷயம். மேலும் இந்த நிகழ்வுக்கு யாரும் பொறுப்பேற்று ராஜினாமா செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |