Categories
உலக செய்திகள்

கச்சதீவை இந்தியாவிடம் ஒப்படைக்க வாய்ப்பு கிடையாது… இலங்கையின் முன்னாள் அமைச்சர் கூறிய தகவல்…!!!

இலங்கை நாட்டின் முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, கச்சத்தீவை இந்தியாவிடம்  மீண்டும் ஒப்படைக்க வாய்ப்புகள் கிடையாது என்று கூறியிருக்கிறார்.

இலங்கை நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், ஒவ்வொரு நாளும் அந்நாட்டு மக்கள் இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். மேலும், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருப்பதோடு, பெட்ரோல், டீசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு  தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

தினசரி பல மணி நேரங்களாக மின்தடை ஏற்பட்டு மக்களை மேலும் அவதிக்குள்ளாக்குகிறது.  எனவே, மக்கள் அந்நாட்டு அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்ட இலங்கைக்கு, இந்தியா கடனுதவி அளித்ததோடு  அத்தியாவசிய பொருட்களையும் அனுப்பியிருக்கிறது.

இந்நிலையில் அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தமிழ் மக்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக தற்காலிகமாகத்தான் செல்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் சீனாவின் வலையில் இலங்கை மாட்டவில்லை என்று கூறியதோடு, மீண்டும் இந்தியாவிடம் கச்சத்தீவை ஒப்படைப்பதற்கு வாய்ப்புகள் கிடையாது என்றும் கூறியிருக்கிறார்.

Categories

Tech |