தமிழகத்தில் பெட்ரோல் – டீசல்லுக்கான மதிப்புக்கூட்டு வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள பொருளாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை ஒட்டுமொத்தமாக தொழில்கள் முடங்கி உள்ளன. இதனால் அரசுக்கான வரி வருவாயும் மிகக் குறைவாகவே இருக்கின்றது. கடந்த ஒன்றரை மாதங்களாக டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெட்ரோல் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி வரியை உயர்த்தினால் மட்டுமே தமிழகத்தில் தமிழக அரசுக்கான வருவாயை என்பது மேலும் அதிகரிக்கும். இந்த சூழ்நிலையில் தமிழகத்தின் நிதி தேவையை கருத்தில் கொண்டு மதிப்புக் கூட்டு வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
பெட்ரோலுக்கான மதிப்புக்கூட்டு வரி 28 சதவீதத்தில் இருந்து 34 சதவீதம் வரையும், டிசலுக்கான மதிப்புக்கூட்டு வரி 20திலிருந்து 25 %வரை உயர்த்துவதாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் விலை 3.25 காசும், டீசல் 2.50 காசும் உயர்கிறது. இந்த விலையில் மாற்றம் என்பது நாளை முதல் அமுலாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.