மே 3ஆம் தேதிக்கு பின்னர் விமான ரயில் போக்குவரத்துக்கு சேவை தொடங்குவது குறித்து முடிவெடுக்கவில்லை என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு என கூறப்பட்ட காரணத்தினால் அதற்குப்பிறகு பயணம் செய்வதற்கான முன்பதிவு ரயில்வே நிறுவனம் அனுமதிக்கவில்லை. ஆனால் ஏர் இந்தியா போன்ற சில விமான நிறுவனங்கள் மே 4ஆம் தேதி முதல் உள்நாட்டு வழித்தடங்கள் பயணம் செய்ய முன்பதிவு அனுமதித்துள்ளனர் இதனால் மக்களிடையே ரயில் விமான சேவைகள் தொடங்குவது குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகரிடம் கேட்டபொழுது அவர் கூறியிருப்பதாவது, “விமானம் ரயில் போக்குவரத்து என்றாவது ஒரு நாள் தொடங்கியே ஆகவேண்டும். அந்த ஒருநாள் என்று என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. அதனை பற்றி இப்போது பேசுவது பயனற்றது. ஒவ்வொரு நாளும் உள்ள நிலவரத்தை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. சில விமான நிறுவனங்கள் அவர்களாகவே டிக்கெட் முன்பதிவை தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப்சிங் விமானப் போக்குவரத்து என்று தொடங்கும் என்று மத்திய அரசு இதுவரை முடிவு செய்யவில்லை முடிவு செய்த பின்னரே டிக்கெட் முன்பதிவை தொடங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக போக்குவரத்துக்கு விஷயத்தில் மத்திய அரசு எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்
கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் இருக்கும் நிலையில் ரயில் விமான போக்குவரத்து சேவை குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய அமைச்சர் கூறியது, மே 3ம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு தளர்வு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்பதை உணர்த்துவதோடு, விமான ரயில் போக்குவரத்தும் மே 3 க்கு பிறகும் தொடங்குவதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.