Categories
மாநில செய்திகள்

கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த ஐயமில்லை – முதல்வர் பேட்டி!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி உரையாற்றி வருகிறார். கொரோனா வைரஸ் இயல்பு வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. பொருளாதார பாதிப்பை தவிர்க்க முழு ஒத்துழைப்பு தேவை என கூறியுள்ளார். முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கண்டறிந்ததில் இருந்து துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர், இருப்போர் விகிதம் குறைவாக உள்ளது. சுமார் 292 மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த ஐயமில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 17 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள், தூய்மை பணியாளர்கள் என 14 நலவாழ்வு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம்.

ஊரடங்கு காலத்தில் விவசாயம், விவசாயம் சார்ந்த பணிகளுக்கு தடை விதிக்கவில்லை, விளை பொருட்களை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளோம் என கூறியுள்ளார். மேலும் பேரிடராக அறிவித்து 4,830 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களை நியமித்துள்ளோம். சுமார் 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோதிலிருந்து வீட்டிலேயே இருந்து அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |