Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் 1000 தெருக்களுக்கு லாரி குடிநீர் கிடையாது….!!

சென்னையில் 1000 தெருக்களுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை பார்த்தோமானால்  நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து இருக்க கூடிய நிலையில் சென்னை மாநகரில் தற்போது நாளொன்றுக்கு 650 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்பல்வேறு விஷயங்களை சொல்லப்பட்டுள்ளது. அதில் லாரிகளில் குடிநீர் வழங்கும் போது பொதுமக்கள் முறையாக சமூக விலகலை கடைபிடிக்கவில்லை.

இதனால் கூடுதலாக 50 மில்லியன் லிட்டர் குடிநீரை சேர்த்து 700 மில்லியன் லிட்டர் குடிநீர் தெருக்களில் உள்ள குழாய்கள் மூலமாக குடிநீர் வழங்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதித்து தடைசெய்யப்பட்ட பகுதிகளாக உள்ள 2 ஆயிரம் தெருக்களில் லாரிகள் மூலமாக குடிநீர் வழங்காமல் தெருக்களின் குழாய்கள் மூலமாக குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

Categories

Tech |