தமிழக சட்டமன்ற கூட்டத்தில் இன்று ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் உள்ளது. 2012 இல் சசிகலா – ஜெயலலிதா மீண்டும் இணைந்த பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட விஷயங்கள், நல்ல முறையில் இல்லை என்ற ஒரு தகவலும் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா உட்பட நான்கு பேரிடம் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. டாக்டர் சிவக்குமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் பெயர் அதில் இடம்பெற்றுள்ளது.
மேலும் அறிக்கையில் இருக்கக்கூடிய விஷயங்களை சுகாதாரத்துறை செயலாளரிடம் கொடுக்கப்பட்டு, துணை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேதி முதல்… 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனுமதிக்கப்பட்ட தேதி முதல் 2016 டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி வரை அவருக்கு எந்த மாதிரியான மருத்துவ சிகிச்சை எல்லாம் வழங்கப்பட்டது.
என்னென்ன மருந்துகள் எல்லாம் கொடுக்கப்பட்டது ? அதுமட்டுமெல்லாம் இந்த விசாரணைக்கு யார் யாரெல்லாம் அழைக்கப்பட்டார்கள் ? என்பது போன்ற பல்வேறு விஷயங்கள் இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.