சரும நோய்களுக்கு நமது சித்தர்கள் கூறிய மாய இலையைப் பற்றி தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்
சருமத்தில் ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டால் கூட அது அசிங்கமாக இருக்கும். நமக்கு கவலையை ஏற்படுத்தும் தருணத்தில் அது பரவி விடுமோ என்ற பயத்தை உண்டாக்கும் .அதற்காக நாம் உடனே கெமிக்கல் கலந்த க்ரீம்களை உபயோகப்படுத்துகிறோம். அந்த கெமிக்கல் கலந்த கிரீம் நமக்கு பின் விளைவை ஏற்படுத்தும் .அந்த கெமிக்கல் கலந்த க்ரீம்களை உபயோகிப்பதை விட்டுவிட்டு இயற்கை முறையில் இந்த இலையை பயன்படுத்தி நாம் ஒரு தைலம் தயாரிக்க போகிறோம்.நமக்கு சரும நோயிலிருந்து முற்றிலும் விடுதலை தரும் அந்த மாயை இலையின் பெயர் குப்பைமேனி .இதற்கு அர்த்தம் குப்பையாய் போன நமது சருமத்தை மேனியாக மாற்றுவது இந்த குப்பைமேனி நமது தமிழகத்தில் எளிதில் கிடைக்கக்கூடிய பச்சிலையுள் குப்பைமேனியும் ஒன்று..
குப்பை மேனியின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்பாடு உடையது. இது தோட்டங்களிலும் சாலை ஓரங்களிலும் காடு மேடுகளிலும் எங்கும் காணப்படும் கூடியது. இதனை யாரும் வளர்ப்பதில்லை காடுமேடுகளில் தானாகவே வளரக்கூடியது சிறு செடி. இது இருமலை கட்டுப்படுத்தும் ,விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய், நமச்சல், ஆஸ்த்மா, குடற்புழுக்கள்,மூட்டுவலி, மற்றும் தலைவலி, போன்ற நோய்களை குணப்படுத்த கூடியது.
குப்பைமேனி இலைஉடன் சிறிதளவு மஞ்சள் உப்பு அறைத்து உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக் குளிக்கத் தோல் நோய் அனைத்தும் சரிவரும்.
குப்பைமேனி வேரை நிழலில் உலர்த்தி காய வைத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி .அதனை ஒரு வெள்ளைத் துணி கொண்டு வடிகட்டி குடித்து வந்தால் நாடாப்புழு, நாக்குப்பூச்சி, இவை அனைத்தும் வெளியேறும் இந்த குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் பின்பு 500 மில்லி அளவு தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதை அடுப்பில் வைக்கவும் அடுப்பினை சிம்மில் மட்டுமே வைக்க வேண்டும். இவ்வாறு நாம் காய்ச்சுவதால் அதில் உள்ள சத்துக்கள் எல்லாம் எண்ணெயில் இறங்கும் இதனை சூடு ஆறியவுடன் ஒரு வடிகட்டிக் கொண்டு வடிகட்ட வேண்டும் இது இப்ப தைலம் மாதிரி நல்ல ஒரு கெட்டியான பதத்தில் இருக்கும்.
உடலில் எந்தப் பகுதியில் படை அரிப்பு அலர்ஜி இருக்கிறதோ அந்த இடத்தில் இதனை பூசிவர அது மறையும் இந்த தைலத்தை தடவும் போது நாம் சோப் கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது அதற்கு பதிலாக அரப்பு மாவு அல்லது பாசிப்பயறு மாவு இதனை தேய்த்துக் குளிக்கவேண்டும் குப்பைமேனி இலை நமக்கு எளிதில் கிடைக்கக்கூடியது நிறைய மருத்துவ குணம் கொண்டது தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தையும் போக்கவல்லது.