முன்னணி நடிகர் விஷால் திமுக தலைவரிடம் நடிகர் சங்கத்தின் நிலைமையை கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.இதை தொடர்ந்து பல்வேறு அரசியல் பிரமுகர்களும், திரை பிரபலங்களும் முதல்வர் முக ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை கூறியுள்ளார். அப்போது இவர் மேலும் கூறியதாவது, நடிகர் சங்கத்தின் இன்றைய நிலைமை கவலைப்படும் படி உள்ளது. கலைஞர்கள் பலர் பென்ஷன் கிடைக்காமல் மருந்து வாங்க கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர் என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், தற்போது கொரோனா மிகவும் தீவிரமாக பரவி வருவதால் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகையால் கொரோனா கட்டுக்குள் வந்தவுடன் தங்களுக்கான தேவைகளை செய்துதரப்படும். அதோடு அனைவரும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.