முஸ்லீம் இயக்கங்கள் சார்பாக நடந்த போராட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தடைகள் எல்லாம் இந்த நாட்டில் பல காலங்களில் நாம் பார்த்திருக்கிறோம். தடை உத்தரவுகளுக்கு பணிந்து போகிறவர்கள் நாம் அல்ல. தடை உத்தரவுகளுக்காக தலை சாய்ந்து போகிற கூட்டம் இங்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால்,
நீங்கள் தடுக்க தடுக்க தான் எங்களுக்கு வீரமும், விவேகமும் அதிகமாக வருமே தவிர, நீங்கள் தடுக்க தடுக்க எழுச்சி அதிகமாக இருக்குமே தவிர, தடை போடுவதினால், தடுத்து விடுவதினால் எந்த பிரச்சனையும் தீர்ந்து விடாது. சமீபத்தில் கூட நம்முடைய உள்துறை அமைச்சரும், ஒரு சில அமைப்புகளை தடை செய்து இருக்கிறார்கள். நான் அந்த விவரத்திற்குள் போக விரும்பவில்லை.
ஆனால் நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்று சொன்னால்… தடை செய்வதனாலே ஒரு இயக்கத்தை தடுத்து விட முடியுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏன் ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ்யை கூட தடை செய்தார்கள், தடை செய்வதினாலே ஆர்.எஸ்.எஸ் இல்லை என்று ஆகிவிட்டதா ? இன்னும் சொல்லப்போனால் பயங்கரவாத நடவடிக்கை, தீவிரவாத நடவடிக்கை, இப்படி தேச விரோத நடவடிக்கை என்று பல்வேறு பெயர்களை சொல்லி, அப்படிப்பட்ட அமைப்புகளை எல்லாம் நீங்கள் தடுக்கிறீர்கள்.
அந்த வார்த்தைகளை எல்லாம் சொல்லி முதலிலே தடை செய்ய வேண்டும் என்று சொன்னால், அதற்கு மிக பொருத்தமான அமைப்பு ஆர்எஸ்எஸ் ஆக தவிர, ஆர்.எஸ்.எஸ்யை விட ஒரு பயங்கரவாத அமைப்பு இந்தியாவிலே இருக்கிறதா? ஆர்எஸ்எஸ்-யை விட ஒரு தேச விரோத அமைப்பு இந்தியாவிலே இருக்கிறதா? ஆர்எஸ்எஸை விட தீவிரவாத அமைப்பு இந்தியாவிலே இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.